பிரபாஸ் மற்றும் கமல் படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

“பாகுபலி” திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸின் மார்க்கெட் திரையுலகில் உயர்ந்தது. இந்தியா முழுவதும் பிரபலமாகி, பான் இந்திய ஸ்டாராக அறியப்படுகிறார்.

பிரபாஸ் “கேஜிஎப்” இயக்குனர் பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில், “சலார்” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் இப்படம் ரிலீசாகவுள்ளது. நாக் அஸ்வின் இயக்கி வரும் “புராஜெக்ட் கே” படத்தின் ஹீரோவாக பிரபாஸும் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் இணைந்து கமல்ஹாசன், அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மெகா பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தின் ஜிமிப்ஸ் வீடியோ அமெரிக்காவில் உள்ள காமிக் கான் மற்றும் பிரபலமான டைம்ஸ் ஸ்கொயரில் ஆகிய இடங்களில் ஜூலை 20ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாகவும், இந்தியாவில் ஜூலை 21ம் தேதி இந்த ஜிலிம்ப்ஸ் வீடியோ ரிலீஸாகும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், பிரபாஸின் அமெரிக்க ரசிகர்கள் இணைந்து, புராஜெக்ட் கே படத்தின் “கே” என்ற ஆங்கில எழுத்து வரும்படி ஒரு கார் பேரணியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து வரும் 2024ல் ரிலீசாகும் என்றும், இப்படம் இந்தியாவில் 10 மொகளிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.