‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

இயக்குனர் கே.வி.அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் “பிரின்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 9ம் தேதி நடைபெறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் தீபாவளியன்று திரைக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது “பிரின்ஸ்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது படக்குழுவினர் அனைவரும் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.