“பிரின்ஸ்” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவை தொடர்ந்து இப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம் “பிரின்ஸ்.” இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இவ்விழாவில் சிவகார்த்தியன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில்,இப்படத்தின் டிரெயிலரை பார்த்த நடிகர் சிம்பு தன் டுவிட்டர் பக்கத்தில் “பிரின்ஸ்” படக்குழுவினரைப் பாராட்டினார். வரும் அக்டோபர் 21ம் தேதி ரிலீஸாக உள்ள இப்படத்திற்கு இன்று சென்சார் போர்டு ‘யு ‘சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ரன்னிங் டைம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.