இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “விக்ரம்” திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பின் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் கதாநாயகி யாருமில்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்கள் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில் பூஜை நடந்துள்ளது. இதில் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டுள்ளதாகவும், பூஜை சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் எதையும் வெளியிட வேண்டாம் என விஜய் கண்டீஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பூஜையில் அர்ஜுன், திரிஷா மற்றும் பிரியா ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தில் பிரியா ஆனந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.