“துணிவு” திரைப்படம் நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவாகி வருகிறது. திரைப்படத்தின் பிரீ ரிலீசில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
அஜீத்தின் 61வது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் படத்தின் தன் காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர, அது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போதெல்லாம், ஒரு படத்திற்கு அதிக பப்ளிசிட்டி மற்றும் புரமோஷன் பணிகள் மேற்கொள்வது ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட்ம் மாலிவுட் என அனைத்து வுட்களிலும் வழக்கமாகி உள்ளது. கோலிவுட்டில் அது பிரதிபலிக்கிறது. சமீபத்தில், சூப்பர் ஹிட் அடித்து வசூலை குவித்த, “விக்ரம்,” “பொ.செ-1” ஆகிய திரைப்படங்கள் மக்களிடன் வரவேற்பை பெற புரமோசனும் ஒரு முக்கிய காரணம். இதில், நடித்த அனைத்து நடிகர்களும், கலைஞர்களும் இதைச் சிறப்பாக செய்தனர். இந்நிலையில், அஜீத்தின் “துணிவு” திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளதால், இப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடக்கும் நிலையில், இப்படத்தின் பிரீ ரிலீசில் நடிகர் அஜீத்குமார் கலந்துகொள்ள வேண்டுமென அவரிடம் ஹெச்.வினோத் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. “அசல்” படத்திற்குப் பின் எந்த விளம்பரம், டிவி நிகழ்ச்சி, பேட்டிகளில் கலந்து கொள்ளாத அஜித், “துணிவு” பிரீ ரிலிசில் கலந்து கொண்டால், இந்த நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடக்குமெனக் கூறப்படுகிறது.