பிரேமலா விஜயகாந்த்தின் கேள்வி!

Filed under: அரசியல்,தமிழகம் |

தேமுதிக பொருளாளர் பிரேமலா விஜயகாந்த் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவின் நடுக்கடலில் பேனா சிலை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மெரினா நடுக்கடலில் பேனா சிலை வைக்க சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவ்வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது என்றும் அதுவும் கடலில் வைப்பது தேவையில்லாதது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது எப்படி இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்தது என்றும் திருச்சியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார். வரும் பிப்ரவரி 17ம் தேதி நடைபெறும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார்.