“பீஸ்ட்” படத்தை முந்திய தனுஷ் படம்!

Filed under: சினிமா |

நடிகர் விஜய் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான “பீஸ்ட்” திரைப்படத்தின் சாதனையை நடிகர் தனுஷின் “திருச்சிற்றலம்“ திரைப்படம் முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், அனிருத் இசையில், நடிகர் தனுஷ், பிரியா பவானி சங்கர், நித்யாமேனன், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்.” இப்படம் உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியாகிரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திரைப்படம் வெளியாகி 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலீட்டுயுள்ளதால் இப்படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படத்தின் 8 நாள் வசூலை “திருச்சிற்றம்பலம்“ படத்தின் வசூல் முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, தொடர்ந்து 3 படங்கள் சரியாகப் போகாத நிலையில் தற்போது, தனுஷின் “திருச்சிற்றம்பலம்“ சூப்பர்ஹிட் அடித்துள்ளதால் இப்படம் மேலும் சாதனை படைக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்தின் அதிகார்ப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.