பல கட்சிகளிலும் மாறி மாறி இருந்த பழ.கருப்பையா தற்போது புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார்.
அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், காங்கிரஸ் என கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளிலும் இருந்த பழ கருப்பையா தற்போது புது கட்சியை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளார். இன்று அக்கட்சிக்கு தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்று பெயரிட்டுள்ளார். தனது கட்சிக்கான முதல் மாநாடு விரைவில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “கொள்கை நேர்மை, காந்தியம், தமிழ் தேசியம். கட்சியின் நிறம் பச்சை நிறம், அதில் தமிழ்நாடு நிலத்தின் படம் மற்றும் காந்தி உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். திமுகவை கடுமையாக விமர்சித்த பழ கருப்பையா திமுகவுக்கு அடிபணிந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இருக்கிறது” என்று தெரிவித்தார்.