அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் மீண்டும் கொரொனோ தொற்றும் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. இதனால் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.
மக்கள் நல்வாழ்வு செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் மாஸ்க் அணிவதை கட்டமாயமாக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதில், பொது இடங்களுக்கு வருவோர் முகக்கவசம் அணிவதையும் தனி நபர் இடைவெளியை பின்பற்றுவதையயும் உறுதிப்படுத்த வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறியும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ் நாட்டில் புதிதாக பிஏ4 தொற்று 4 பேருக்கு பிஏ5 8 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது உருமாறிய கொரொனாவால பாதிகப்பட்ட 12 பேரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என கூறியுள்ளார்.