புதுச்சேரி விஷச்சாராய சம்பவத்திற்கு ஈபிஎஸ் கண்டனம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 66 பேர் உயிரிழந்தனர். இன்னும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

தற்போது புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு கள்ளச்சாராயம் வந்ததாகவும் அதை குடித்த ஏழு பேர் மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இச்சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, “விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது. நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று விடியா திமுக முதலமைச்சர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது. அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.