விரைவில் புதுவையில் பிரிபெய்டு மின் திட்டம் கொண்டு வரப்படும் என பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரியில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தற்போது மின் மீட்டரில் கணக்கு எடுக்கப்பட்டு மின்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மின் நுகர்வோர் உடன் பிரீபெய்டு மின் கட்டணம் வசூலிக்க புதுவை மின்சாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இந்த திட்டத்தின் மூலம் 4 லட்சம் ஸ்மார்ட் ப்ரீபெய்ட் மின் மின் மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு பதினைந்து சதவீத மானியமாக வழங்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில் பிரிபெய்டு மின் திட்டத்திற்கு திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரிப்பேடு மின் திட்டத்தை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று திமுக மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் தெரிவித்தனர்.