17 வயது சிறுவன் புனேவில் கடந்த சில நாட்களுக்கு முன் கார் விபத்தை ஏற்படுத்தி இரண்டு நபர்கள் பலியாகினர். அந்த சிறுவனுக்கு அளிக்கப்பட்டிருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. தற்போது அந்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் உள்ளார். தற்போது அந்த சிறுவனின் தாத்தா கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கார் விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் வேதாந்த்தின் தாத்தா சுரேந்திரா அகர்வால் என்பவர் தனது கார் ஓட்டுநர் கங்காராம் என்பவரை மிரட்டி கார் விபத்தை தான் ஏற்படுத்திதாக பழியை ஏற்க வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் டிரைவர் அந்த பழியை ஏற்றுக்கொள்ளாமல் காவல்துறையில் புகாரளித்ததை அடுத்து அவரது புகாரின் பேரில் சுரேந்திர அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கார் விபத்தின் வழக்கில் சாட்சிகளை கலைக்க முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. காவல்துறை தரப்பில் இவ்வழக்கை மெதுவாக விசாரிக்க சம்பந்தப்பட்ட காவலர்களை அவர் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சிறுவனின் தந்தை விஷால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.