புரட்சித்தலைவியின் பாராளுமன்ற எழுச்சி!

Filed under: அரசியல்,இந்தியா |

42. Amma Photo (Present)வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அகில இந்திய கட்சிகள் தீவிர அரசியல் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாம். பா.ஜ.க. தனது துருப்புசீட்டான நரேந்திரமோடியை அடுத்த பிரதமர் தேர்வுக்கு அறிவித்துவிட்டது. இதைக்கண்டு காங்கிரஸ், பா.ஜ.க. மூத்த தலைமைகள் கடும் எதிர்ப்பில் உள்ளதாகக் கூறுகிறார்கள். மதசார்பு அற்றத் தன்மையை போற்றி வாய்கிழிய பேசி ஆதரித்த காங்கிரசும், அதன் கூட்டணிக்கட்சிகளும் தற்போது நரேந்திரமோடியின் எழுச்சியைக்கண்டு வாயடைத்து நிற்கிறார்களாம். காரணம் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மோடி, ஊழலற்ற அரசியல்வாதி என்ற கருத்து உலவுகிறது.
சுமார் 220 பாராளுமன்றத் தொகுதிகளில் பின்தங்கிய மக்களின் ஆதரவுதான் வெற்றியை முடிவு செய்வதாகக் கூறுகிறார்கள். மேலும் தலித்துக்கள் சுமார் 17 சதவீதம் இந்தியாவில் ஓட்டு வங்கியை பெற்றுள்ளார்கள். இதில் மேற்கு மாநில தலித்துக்கள் அதிக ஆதரவை பா.ஜ.க.விற்கே வழங்கி உள்ளதாக கூறப்படுகிறதாம். தற்போது கிழக்கு மாநிலங்களிலுள்ள ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் நரேந்திரமோடிக்கு ஆதரவு கொடுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதாம். தங்கள் சமுதாயத்தை முன்வைத்து ஏமாற்றிய அரசியல் கட்சிகளைக் கண்ட இஸ்லாமிய, கிறிஸ்தவ சமுதாயங்கள் தற்போது கடும் வெறுப்பில் உள்ளார்களாம்.

இதற்கிடையில் அத்வானியின் ஆதரவாளர்கள் பா.ஜ.க.வின் ஆதாரத்தை பல மாநிலங்களில் பிளந்து, அரசியல் செய்ததால் வெறுப்புற்ற பா.ஜ.க. தொண்டர்கள், தற்போது நரேந்திரமோடியின் எழுச்சிக்கு பலத்த ஆதரவு தெரிவித்து உள்ளர்களாம். மேலும் உத்திரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. தன் ஆதரவை பெருக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள். உண்மையில் பா.ஜ.க.வும், காங்கிரசும் கைகோர்த்து தமிழக புரட்சி தலைவியை செயலிழக்க கடும் முயற்சிகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறதாம். பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டில் உயிர்கொடுத்த ஒரே அரசியல் தலைவி தமிழக முதல்வர்தான் என்கிறார்கள். வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக முன்னாள் தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தி.மு.க. தலைமைக்கு ஆதரவு காட்டி தங்கள் துரோக மனப்பான்மையை வெளிப்படுத்தினார்கள். அதற்கு பா.ஜ.க. மூத்த தலைமையின் வெளிப்படையான ஆதரவு இருந்ததாக கூறப்பட்டது. பிறகு தி.மு.க.வுடன் இணைந்து பா.ஜ.க. செயல்பட்டாலும் தமிழக மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு தமிழக முதல்வருக்கு சென்றபோது, பா.ஜ.க. தலைமை மிரண்டுபோனதாம்.
அடுத்த மத்திய ஆட்சி அமைய பாஜ.க.விற்கு தமிழக முதல்வரின் ஒட்டுமொத்த ஆதரவு தேவை என்ற உணர்வு அதிகம் எழுந்துள்ளதாம். மேலும் இலங்கை அதிபர், தமிழக புரட்சிதலைவியின் எழுச்சி தன் நாட்டை தமிழகத்துடன் இணைக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படலாம் என்ற பீதியில் உள்ளதாக கூறப்படுகிறதாம். இலங்கை அரசுக்கு ஆதரவான தமிழக அறிவு ஜீவிகள், புரட்சித்தலைவியின் பாராளுமன்ற வெற்றி, தமிழர்கள் நலனை உயர்த்திவிடும் நிலையை கொண்டு செல்லும் என்ற கவலையில் புரட்சித்தலைவியை பா.ஜ.க.வுடன் இணைத்து செயல்படுத்த சகுனித்தனமான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாக தமிழக வட்டாரங்கள் கூறுகின்றனவாம்.
ஏற்கெனவே அமெரிக்க நாட்டின் மனித உரிமை பிரதிநிதியால் கடுமையான குற்றச்சாட்டிற்கு இலங்கை அதிபர் ஆளாகி உள்ளாராம். தமிழின துரோகிகள், தமிழக மத்திய அமைச்சர்கள் உள்பட தமிழக அரசியல்வாதிகள், இலங்கை அரசின் கைக்கூலி பெற்று செயல்பட்டு வருவதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாம். இதனால் உலகத்தமிழ் மக்கள் அமெரிக்க அதிபரையும் தமிழினத் தெய்வமாக புரட்சி தலைவியையும் அதிகமாக சார்ந்து இருப்பதே உண்மை என்கிறார்கள்.

ஆனால், புரட்சித்தலைவிக்கு அடிமையாய் இருப்பது போன்று ஒரு கூட்டம் அ.தி.மு.க.வில் மிகவும் தீவிரமாக இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. புரட்சித்தலைவியின் பெயரை ஓங்கி உச்சரித்து, அ.தி.மு.க. ரகசியங்களை எதிர்கட்சிகளுக்கு பரப்பும் துரோகச் செயலில் ஈடுபட்டிருப்பதாக உண்மை செய்தி உலவி வருகிறது. இந்த துரோகக்கூட்டம் புரட்சித்தலைவியின் நெருங்கிய வட்டாரங்களை தங்கள் பண பலத்தால் வீழ்த்தி, தங்கள் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புரட்சித்தலைவியின் பாராளுமன்ற எழுச்சி உலக நாடுகளில் மிகுந்த ஆவலை எதிர்பார்ப்பதாக தலைநகரில் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.