புரமோஷன் ஷூட்டை தொடங்கிய லோகேஷ்!

Filed under: சினிமா |

சில மாதங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்க, கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இப்படம் 2013ம் ஆண்டு வெளியான “தி பர்ஜ்” படத்தின் ஒரு சிறு பகுதியை தழுவிதான் லோகேஷ் இப்படத்துக்கான திரைக்கதையை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. ஜூன் மாதத்தில் ஷூட் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 22ம் தேதி இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு புரமோஷன் வீடியோவோடு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஷூட்டிங் நேற்று சென்னையில் சன் பிக்சர்ஸ் அலுவலகத்தில் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.