போக்குவரத்துத்துறை வாய்மொழியாக டிக்கெட் எடுத்தும் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது.
பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் டிக்கெட் எடுத்து பயணம் செய்ய விரும்பினால் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம். அவ்வாறு டிக்கெட் கேட்கும் பெண்களுக்கு டிக்கெட் கொடுக்குமாறு வாய்மொழியாக நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழாவில் பேசிய போது பெண்கள் ஓசியில் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து பல பெண்கள் தாங்கள் டிக்கெட் எடுத்து தான் பயணம் செய்வோம் எங்களுக்கு ஓசிப்பயணம் தேவையில்லை என்று நடத்துனரிடம் சண்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது. பேருந்துகளில் மகளிர் டிக்கெட் எடுக்க விரும்பினால் அவர்களுக்கு டிக்கெட் வழங்க அனைத்து பேருந்து நடத்துனர்களுக்கும் வாய்மொழியாக போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.