பைனான்ஸியர்களின் அலுவலகத்தில் நடைபெற்ற ரெய்டுகளால் நடிகர் அஜீத் நடிக்கும் 61வது படத்தின் படப்பிடிப்பு சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அஜீத்தின் 61வது படப்பிடிப்பு மார்ச் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் பி.வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்போது சில நாட்களாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் படப்பிடிப்பு நடத்துவதற்கான பைனான்ஸ் கிடைக்கவில்லையாம். இப்படத்துக்காக மதுரை அன்புச் செழியன்தான் பைனான்ஸ் செய்து வருகிறாராம். ஆனால் சமீபத்தில் அவருடைய அலுவலகத்தில் ரெய்டு நடைபெற்றது. அதன்பிறகு அவர் தனது அடுத்த கட்ட பைனான்ஸ்களை எந்த படத்துக்கும் இன்னும் கொடுக்கவில்லையாம். இதே போல “மாவீரன்” திரைப்படமும் பைனான்ஸ் பிரச்சனையால் நிறுத்தப்பட்டுள்ளதாம்.