பேருந்து மற்றொரு பேருந்தின் மீது மோதல்!

Filed under: தமிழகம் |

ஒரு பேருந்து ஓட்டுனர் மற்றொரு பேருந்தின் மீது ரிவர்ஸ் எடுத்து மோதியது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

பொதுவாக அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்து எடுப்பது தொடர்பாக பிரச்சனைகள் வரும். சில நேரங்களில் வாக்கு வாதங்கள் முற்றி, இதன் மூலம், பயணிகளும் பாதிக்கப்படுவார்கள். அவ்வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில், ஒரு பேருந்து மற்றோரு பேருந்து மீது மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில். இன்று மதியம், பேருந்து புறப்படும் நேரப் பிரச்சனையின் காரணமாக இரு ஓட்டுனர்களுக்கு இடையே, தகராறு ஏற்பட்டது. இதில், ஒரு பேருந்து ஓட்டுனர் பஸ்ஸை, ரிவர்ஸ் எடுத்து, மற்றொரு பேருந்து மீது மோதினார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.