மெட்டா நிறுவனம் டுவிட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக தனது புதிய சமூக செயலியை அறிமுகப்படுத்த உள்ளது.
சமூக வலைதள செயலிகளில் உலகம் முழுதும் பிரபலமாக முன்னணியில் இருப்பது டுவிட்டர். சமீபத்தில் இந்த டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். அவர் வாங்கியது முதல் டுவிட்டர் தொடர் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதிகாரப்பூர்வ புளூ டிக்கை பெற கட்டணம், டுவிட்டர் பணியாளர்கள் பணி நீக்கம், தொழில்நுட்ப கோளாறு போன்றவற்றால் பயனாளர்கள் பலர் டுவிட்டர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். டுவிட்டர் பயனாளர்களை ஈர்க்கும் விதமாக அதேபோன்ற வசதிகளுடன், கூடுதலாக சில சிறப்பம்சங்களுடன் கூடிய Threads என்ற புதிய சமூக வலைதள செயலியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் அதிகாரப்பூர்வ புளூடிக் போன்றவற்றிற்கு பணம் செலுத்த தேவையில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த Threads செயலியை ஜூலை 6ம் தேதி அமெரிக்காவில் மெட்டா நிறுவனம் வெளியிடுகிறது. ஜூலை 7ம் தேதி முதல் இந்தியாவிலும் இந்தஜ Threads செயலி பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதன் மூலம் டுவிட்டரில் எலான் மஸ்க் செய்து வரும் அட்டகாசங்கள் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.