பேஸ்புக் அமெரிக்க அரசுக்கு நிறுவனம்!

Filed under: உலகம் |

பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் அமெரிக்காவில் பத்திரிக்கை மசோதா விரைவில் நிறைவேற்றப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில் பத்திரிகை மசோதாவை நிறைவேற்றினால் பேஸ்புக்கில் செய்திகள் வெளியிடுவதை நிறுத்திக் கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பத்திரிகை மசோதா சட்டம் நிறைவேறியது. அதன் பின் அந்நாட்டிடம் பேஸ்புக் ஒப்பந்தம் செய்து கொண்டு தனது முடிவை மாற்றியது. இந்நிலையில் அமெரிக்காவில் பத்திரிகை மசோதா நிறைவேற்றப்பட்டால் சமூக ஊடகங்கள் அமெரிக்காவின் உள்ளூர் செய்திகள் ஆக மாறும் என்றும் அதன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். பத்திரிகை மசோதாவை நிறைவேற்றினால் முகநூலில் செய்திகள் அனைத்தையும் வெளியிடுவதை நிறுத்தி விடுவோம் என பேஸ்புக் நிறுவனம் மிரட்டல் விடுத்துள்ளது.