பேஸ்புக் நிறுவனத்திற்கு சோதனை!

Filed under: இந்தியா,உலகம்,தமிழகம் |

அதிகமாக அன்-இன்ஸ்டால் செய்யப்பட்ட இரண்டு செயலிகள் 2023ம் ஆண்டுக்கான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு செயலிகளும் பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமானது.

இன்ஸ்டாகிராம் மற்றும் த்ரெட்ஸ் ஆகிய இரண்டு செயலிகள் பேஸ்புக் அலுவலகத்திற்கு சொந்தமாக உள்ளன. கடந்த ஜூலை மாதம் பேஸ்புக் நிறுவனம் த்ரெட்ஸ் என்ற செயலியை அறிமுகம் செய்தது. இச்செயலியை ஐந்து நாட்களில் 10 கோடி பேர் இன்ஸ்டால் செய்தனர். ஆனால் ஒரு சில மாதங்களில் இச்செயலியை பலர் அன்இன்ஸ்டால் செய்தனர். 2023ம் ஆண்டில் அதிகமாக அன்இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலி த்ரெட்ஸ் என்று கூறப்படுகிறது. அதேபோல் பேஸ்புக்கில் நிறுவனத்திற்கு சொந்தமான இன்னொரு செயலியான இன்ஸ்டாகிராம் 2023ம் ஆண்டில் அதிகமாக அன்-இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இரண்டு செயலிகள் தவிர ஸ்னாப் ஷாட் செயலியும் அதிகமாக அன்இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது