காதலி திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் லைவ் வீடியோவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்(27) ஒருவர் பெண்ணை ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த போது, அப்பெண் தன் வீட்டில் தெரிவித்துள்ளார். இத்திருமணத்தில் விருப்பமில்லாத பெற்றோர் அவரை வேண்டாம் என்று கூறியுள்ளனர். பின்னர், காதலி அவரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவிக்கவே, இளைஞர் மனம் உடைந்து பேஸ்புக்கில் லைவ் வீடியோவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.