பைக் டூர் முடித்து சென்னை திரும்பிய அஜித்!

Filed under: சினிமா |

லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜீத் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடிக்க உள்ளதாகவும், அதேபோல் தமன்னா, திரிஷா மற்றும் அர்ஜுன் தாஸ் ஆகியோரும் இப்படத்தின் நடிப்பதாக தகவல் வெளியானது. இந்தியா முழுதும் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, சமீபத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு அஜீத் பைக் டூர் சென்றிருந்தார். உலக பைக் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, அஜீத்குமார் நேற்று சென்னை திரும்பியதாக தகவல் வெளியாகிறது. அவர் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் புகைப்படம் வைரலாகி வருகிறது. ஏற்கனவே “விடாமுயற்சி” அப்டேட் விரைவில் வெளியாகும் என இயக்குனர் மகிழ்திருமேனி அறிவித்திருந்தார். அஜீத்துடன் கலந்து ஆலோசித்துவிட்டு, படக்குழு விரைவில் புதிய அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.