பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது சிறப்பு பேருந்துகள் முழுவதும் புக்கிங் ஆகியுள்ளது. மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பொங்கல் பண்டிகைக்காக பலர் சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொங்கல் ஞாயிற்றுக்கிழமை வரும் நிலையில் முன்னதாக சனிக்கிழமையும் விடுமுறையாக உள்ளதால் மக்கள் ஜனவரி 13 வெள்ளிக்கிழமையில் அதிகமாக ஊருக்கு புறப்படுவர் என கணித்து போக்குவரத்து கழகம் ஜனவரி 13ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை தொடங்கியது. ஆனால் ஜனவரி 13க்கான சிறப்பு பேருந்துகள், ரயில்கள் முழுவதும் புக்கிங் ஆகியுள்ள நிலையில் மக்கள் பலர் ஜனவரி 12ம் தேதியே சொந்த ஊர்களுக்கு கிளம்ப திட்டமிட்டுள்ளனர். இதனால் முன்கூட்டியே ஜனவரி 12ம் தேதியிலிருந்து சிறப்பு பேருந்துகள் சேவையை தொடங்குவது குறித்து போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருகிறது.