அதிமுவின் பொதுச் செயலாளராக நான் தான் தற்போது இருந்து வருகிறேன் என்று சசிகலா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஒற்றைத்தலைமை குறித்து அதிமுக கட்சிக்குள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாடு முழுதும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் சசிகலா தற்போது நான் தான் அதிமுகவின் பொது செயலாளராக இருந்து வருகிறேன் என்று கூறியுள்ளார். “அதிமுக அடிமட்ட தொண்டர்களின் சட்ட திட்டபடி நான் அதிமுகவின் பொது செயலாளராக இருந்து வருகிறேன். அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தான் குழப்பம் விளைவிக்கிறார்கள். தொண்டர்கள் தெளிவான மனநிலையோடு இருக்கிறார்கள். விரைவில் அதிமுக ஆட்சி அமைப்பேன்” என்று பேட்டியளித்துள்ளார்.