பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை விபரங்கள் குறித்து என பேட்டியளித்துள்ளார்.
அவரது பேட்டியில், “வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே சமயம் பொதுத்தேர்வு நடைபெறுவதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அதற்கு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம். அவ்வகையில் மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க உள்ளோம், அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும்” என்று கூறினார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதமும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதமும் பொது தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அந்த சமயத்தில் தான் நாடாளுமன்ற தேர்தலும் வரவுள்ளது.