‘பொன்னியின் செல்வனின்’ புதிய வீடியோ!

Filed under: சினிமா |

மணிரத்னத்தின் கனவு படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் நவம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் படக்குழு படத்தின் டீசர் வெளியிட்டனர். இது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் மேக்கிங் ஆப் வீடியோவை படக்குழு வெளியிட்டள்ளது.

இந்நிலையில், சோழர்களின் காலம்தான் “தமிழர்களின் பொற்காலம்“ என்ற தலைப்பில் வரலாற்றாரிசியர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், போன்றோர் சோழர்கள் பற்றிய பெருமையளைக் கூறும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது.