பொன்னியின் செல்வன் ஆடியோ ரிலீஸ் லேட்டஸ்ட் அப்டேட்!

Filed under: சினிமா |

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது “பொன்னியின் செல்வன்” திரைப்படம்.

மணிரத்னத்தின் கனவுப் திரைப்படமான இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா. பிரகாஷ்ராஜ். ஜெயராம். சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இருபாகங்களாக உருவாகி வருகிறது இத்திரைப்படம். இதன் முதல்பாகம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு விருந்தளிக்கும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்போது செப்டம்பர் 30ம் தேதி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் ஆடியோ வெளியீடு ஜூலை மாதத்தில் தஞ்சாவூரில் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு சிலர் ஆடியோ ரிலீஸ் சென்னையிலேயே நடக்கும் என்றும் கூறுகின்றனர். இவ்விழாவில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இரு முன்னணி நடிகர்கள் கலந்துகொள்ள திரைப்படக்குழு முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான மணிரத்னம் ரஜினிகாந்தை சந்தித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.