மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை ஏ.ஆர்.ரகுமானே பாடியுள்ளார். இப்பாடலை இளங்கோ லட்சுமணன் என்பவர் எழுதியுள்ளார். “பொன்னி நதி” என்று தொடங்கும் பாடல் இணையதளத்தில் மிகப்பெரிய வைரலாகி வருகிறது. சுபாஷ்கரன் தயாரிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகும் இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்திய திரையுலகிற்கு பெருமை தரும் படமாக இது அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.