“பொன்னியின் செல்வன்” வெப் சீரிஸ்!

Filed under: சினிமா |

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் பொன்னியின் செல்வன் கதையை அனிமேஷன் வெப் சீரிஸாக உருவாக்கி வருகிறார்.

பொன்னியின் செல்வன் நாவல் கல்கி அவர்களால் எழுதப்பட்டு 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழில் அதிகமாக விற்பனையான நாவல் பட்டியலில் கண்டிப்பாக பொன்னியின் செல்வன் முதலிடத்தில் உள்ளது. இப்போது கூட பொன்னியின் செல்வன் புத்தகக் கண்காட்சிகளில் பெஸ்ட் செல்லராக இருந்து வருகிறது. இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோர் பலமுறை முயன்றார்கள். ஆனால் பிரம்மாண்டம் காரணமாக தள்ளிக்கொண்டே போனது. இப்போது இறுதியாக படமாக எடுக்க மணிரத்னம் களத்தில் இறங்கி இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார். அதே நேரத்தில் பொன்னியின் செல்வனை வெப் சீரிஸாகவும் எடுக்கும் வேலைகள் நடைபெற்று வந்தன. ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் மே 6 எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனமும் பிரபல ஸ்டிரிமிங் தளமான எம்.எக்ஸ்.பிளேயர் நிறுவனமும் இணைந்து இதைத் தயாரிப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன. இப்போது மீண்டும் இந்த சீரிஸ் திரைக்கதைப் பணிகள் தொடங்கியுள்ளன. படத்தை இயக்க தற்போது இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் 8 தோட்டாக்கள் மற்றும் குருதி ஆட்டம் ஆகிய படங்களின் இயக்குனராவார்.