செந்தில் பாலாஜியை போக்குவரத்து துறையில் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக அமைச்சர் பொன்முடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அமைச்சர் பொன்முடி அமைச்சராக இருந்தார். சட்ட விரோதமாக செம்மண் எடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வடக்கை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட மனுக்கள் சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டது. அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்வழக்கை மீண்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை அடுத்து அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.