திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் படத்தின் புரமோஷனுக்கே வரமுடியாது என்று சொல்லும் காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்த நடிகை தெருவில் இறங்கி தான் நடித்த படத்தின் போஸ்டரை ஒட்டியுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை நீரஜா “மஞ்ச குருவி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்காக சாலையில் இறங்கி நீரஜா போஸ்டர் ஒட்டினார். அப்போது நீங்கள் ஏன் போஸ்டர் ஒட்டுகிறார்கள் என்று ஒரு நபர் கேள்வி கேட்டபோது, “நான் தான் இப்படத்தின் கதாநாயகி, இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நானே இறங்கி போஸ்டர் ஒட்டி புரமோஷன் செய்கிறேன்” என்று கூறியுள்ளார். ஒரு படத்தில் நடித்த நாயகியே தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டி புரமோஷன் செய்வது மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.