இறந்த மகனின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டி, கல்லறையில், கியூ.ஆர். கோட்-ஐ பதித்துள்ளனர் கேரளாவைச் சேர்ந்த பெற்றோர்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குரியாச்சிராவச் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி லீனா. இவர்களின் மகன் ஐவீன் பிரான்சிஸ் உடன் ஓமன் நாட்டில் வசித்து வந்தனர். மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, இசை மற்றும் விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். கடந்த 2021ம் ஆண்டு பேட்மிட்டன் விளையாடும்போது, திடீரென்று மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். மகனின் இழப்பைத் தாங்க முடியாத பெற்றோர், தங்களின் சொந்த ஊரான கேரள மாநிலம் குரியாச்சிரா பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லறையில் அடக்கம் செய்தனர். தங்கள் மகனின் நினைவில் இருந்த பெற்றோர் அவது பெயரில், இணையதளம் உருவாக்கினர். மேலும் தங்களின் மகனின் வாழ்க்கை வரலாறு மற்றவர்க்கு தூண்டுதலாக இருக்க வேண்டுமென்று அவரது கல்லறையின் மேல், கி.யூ.ஆர் கோட் ஆக பதித்துள்ளனர். இச்சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.