மகாராஜா படக்குழுவினரைப் பாராட்டிய லோகேஷ்!

Filed under: சினிமா |

நேற்று விஜய் சேதுபதியின் 50வது படமான “மகாராஜா” வெளியானது. திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வெற்றிகரமாக ஓடிவருகிறது.

படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரெயிலர் ரிலீசாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. இந்த வெற்றி அவருக்கு மிகவும் முக்கியமானதாக அமையும். படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் “மகாராஜா” படத்தைப் பாராட்டி வருகின்றனர். அவ்வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் “எங்கும் “மகாராஜா” படத்தைப் பற்றிய அதிர்வுகளைக் காண்கிறேன். விஜய் சேதுபதி அண்ணாவின் 50வது படத்துக்கு எனது வாழ்த்துகள். எங்களுக்கு எப்போதும் உத்வேகமாக இருங்கள். இயக்குனர் நித்திலன் அண்ணா மற்றும் அனுராக் காஷ்யப் சார் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் பதிவிட்டுள்ளார்.