மணீஷ் சிசோடியாவை கடந்த 26ம் தேதி கைது செய்தது. நீதிமன்றம் தற்போது அவருக்கு மேலும் 2 நாட்களுக்கு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி யூனியனில், புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. மணீஷ் சிசோடியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்ததோடு டில்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியது. இந்நிலையில், கைது செய்யப்பட்ட சிசோடியாவை 4ம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க டில்லி ரோஸ் அவன்யூ சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. சிபிஐ கவலில் அடைக்கப்பட்டு, அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இன்றுடன் சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில் மணீஷ் சிசோடியாவை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, ஊழல் வழக்கில் கைதாகியுள்ள சிசோடியாவை மேலும் 3 நாட்கள் விசாரிக்க அவகாசம் தரும்படி அனுமதி கோரினர். அதேபோல் இவ்வழக்கில், மணீஷ் சிசோடியா ‘தனக்கு ஜாமீன் தரும்படி, சிசோடியாவும் முறையிட்டதுடன்ம் 9 முதல் 10 மணி நேரம் என்னை அமரவைத்து ஒரே கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்டு மனவுளைச்சல் உண்டாக்கியதாக’ அவர் குற்றம்சாட்டினார். இதையடுத்து, நீதிமன்றம், சிசோடியாவை மேலும் 2 நாட்கள் (மார்ச் 6ம் தேதி வரை) காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்துள்ளது.