மண்ணாங்கட்டி படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

நயன்தாரா திருமணத்துக்குப் பின் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. சமீபத்தில் அவர் நடிப்பில் ரிலீசான “அன்னபூரணி” படுதோல்வியாக அமைந்தது. இப்போது புதிதாக “மண்ணாங்கட்டி” என்ற படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.

இப்படத்தை “சர்தார்” உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இத்திரைப்படத்தில் நயன்தாராவோடு யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை பிளாக்‌ஷீப் யுட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கிய ட்யூட் விக்கி இயக்கி வருகிறார். படத்தின் கதைக்களம் ஊட்டியில் நடப்பது போல உருவாக்கப்பட்டது. ஆனால் நயன்தாரா ஊட்டிக்கு வர முடியாது என சொல்லிவிட்டதால் சென்னையிலேயே திராட்சை தோட்டம் செட் ஒன்றை அமைத்து படமாக்கி வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக சென்னையில் நடந்து வருகிறது. இப்போது ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 15 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் மீதமுள்ளதாக கூறப்படுகிறது. அதை விரைவில் முடித்து விட்டு ரிலீஸ் பணிகளைத் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.