தங்கள் அம்மன் வழிபாட்டினை செவ்வென முடித்த பக்தர்கள் நாகூர் ஆண்டவர் தர்காவிற்க்கு இன்று வந்தனர்.
மனமுருகி நாகூர் ஆண்டவரை வழிபட்ட பக்தர்களுக்கு நாகூர் தர்கா நிர்வாகம் வரவேற்று பிரார்த்தனைக்கு உதவியது. அனைவருக்கும் உகந்தவரான நாகூர் ஆண்டகை வாசலுக்கு இந்த புனித கந்தூரி மாதத்தில் வருகை புரிந்த பக்தர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தோம். கோயிலில் பூஜை முடிந்ததும் பக்தர்கள் சற்று நேரம் வெளி திண்னையில் அமர்வதுபோல தர்கா மினாரா கீழ் பக்தர்கள் அமர்ந்த விதம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது. மதநல்லிணக்கத்தின் இலக்கணம் நாகூர் தர்கா என தர்கா மானேஜிங் டிரஸ்டி டாக்டர் செய்யது காமில் சாஹிப் கூறினார்.