அமைச்சர் முத்துசாமி மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மதுபான விலை ஏற்றத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனலுக்கு அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பேட்டியளித்தபோது மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக மதுபானம் விலை உள்பட அனைத்து விலைகளும் உயர்த்தப்பட உள்ளது. இந்த பக்கம் கொடுப்பது போல் கொடுத்து இன்னொரு பக்கம் மக்களிடமிருந்து அரசு பணத்தை வாங்கிக் கொள்கிறது என்று அவர் குற்றம் சாட்டியிருந்தார். மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மதுபானங்கள் விலையேற்றத்திற்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை. அனைத்து மதுபானங்களுக்கும் விலை உயர்த்தப்படவில்லை, ஒரு சில குறிப்பிட்ட மதுபானங்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார்.
Related posts:
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைச்சங்கமம்.
ஜூலை 1-ம் வங்கிக் கணக்குகளில் ஒரு மேஜிக்; ராகுல் காந்தி!
ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு.
#BREAKING: தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு - குணம் அடைபவர்கள் அதிகரிப்...