டாஸ்மாக் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்தனர். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
மயிலாடுதுறை அருகே இருவர் மதுபானம் குடித்த நிலையில் அவர்கள் குடித்த மதுபானம் பரிசோதனை செய்யப்பட்டது. கெமிக்கல் பரிசோதனை செய்ததில் மதுவில் சயனைடு கலந்தது உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விளக்கமளித்துள்ளார். மேலும் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று மாலைக்குள் வந்து விடும் என்றும் அதன் பிறகு இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யார் என்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கி இருவர் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பது பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.