தொடர்ந்து பெய்த மழையால் மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மாநகராட்சி வார்டு 84-வது வார்டு பகுதியில் சாக்கடை நீர் செல்லாமல் குளம் போல் தேங்கியுள்ளது.
84வது வார்டு பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரியிடம் பல்வேறு முறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் திடீரென மதுரை விமான நிலைய சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவனியாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் மணி குமார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மார்ட்டின் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் விரைவாக சாக்கடை நீரை அகற்றி தூய்மைப்படுத்துவது குறித்து மாநகர ஆட்சி அதிகாரிகள் உறுதி அளித்தன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். பொதுமக்கள் திடீர் சாலை மறியலால் மதுரை விமான நிலைய சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related posts:
தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தம் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல...
ராமநாதபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தை எதிர்த்து ஐந்து ஓ. பன்னீர் செல்வம் பெயர் கொண்ட...
ஸ்டாலினை பாராட்டி மதுரையில் அழகிரி ஆதரவாளர் போஸ்டர்.
சபாநாயகருக்கு நேரில் ஆஜராக அதிரடி உத்தரவு!