விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவி திடீரென மாடியிலிருந்து விழுந்து மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தேனியை சேர்ந்த 24 வயது மாணவி மகேஸ்வரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்எட் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர் பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தார். நேற்று திடீரென அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மாடியிலிருந்து அவர் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் அவரை தள்ளிவிட்டு கொலை செய்தார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாடியிலிருந்து விழுந்த மாணவியின் உடல் அருகே செல்போன் இருந்ததால் செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது அவர் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது
Related posts:
ஐ.நா சபையில் ராஜபக்சே பேச எதிர்ப்பு: நியூயார்க்கில் தமிழர்கள் போராட்டம்!
போலி பத்திரம் மூலம் ஆதி திராவிட நலத்துறைக்கு சொந்தமான இடத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வே...
“கலைஞர் 100 விழா”- ரஜினி, கமலுக்கு அழைப்பு!
டாஸ்மாக் மது கடையை மூடக்கோரி பூரிப்புரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்