பெண் ஒருவர் புதுச்சேரியிலிருந்து காரில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை கடத்திய போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்ட கலால் துறை போலீசார் அண்ணா பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது காரில் சந்தேகத்திற்கு இடமாக வந்த பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் 12 பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட தியாகதுருகம் பகுதியை சார்ந்த விஜயா என்பவரை கலால் துறை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், புதுச்சேரியிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதிக்கு மது கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட பெண் மீது ஏற்கனவே மது கடத்தல் வழக்கு உள்ளது.