மத்திய அமைச்சருடன் தமிழக வனத்துறை அமைச்சர் சந்திப்பு

Filed under: இந்தியா |

புதுடெல்லி, செப் 28:
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை, தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று சந்தித்துப் பேசினார்.

டெல்லிக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள தமிழ்நாடு அரசின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தனின்பேரில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை நேற்று (27.09.2021) சந்தித்தார்.

சரம் சக்தி பவனில் நடந்த இந்த சந்திப்பில், தமிழ்நாடு அரசின் வனம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறையின் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாஹுவும் உடனிருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு திட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, தமிழக வனப்பரப்பினை 23.98 சதவீதத்திலிருந்து, 33 சதவீதமாக உயர்த்த தேவையான நிதி உதவி , சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நில மேம்பாட்டிற்கு தேவையான நிதி உதவி, தமிழ்நாட்டில் மனித, வன விலங்குகள் மோதல்களை தடுப்பதற்கான நிதி உதவி மற்றும் தமிழக புலிகள் காப்பகங்களுக்கு தேவையான நிதி, யானைகள் வழித்தட மேம்பாட்டுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து, இந்த சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.