மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வா?

Filed under: இந்தியா,தமிழகம் |

இன்னும் ஒரு சில நாட்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத அகவிலைப்படி உயர்த்தப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டது.

கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% என இருந்த அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 38 சதவீதத்திலிருந்து 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 42 சதவீதமாக அகவிலைப்படி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 42 சதவீத அகவிலைப்படி கணக்கெட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு வாக்குறுதி அளித்து இருந்தது.