மனித உரிமை ஆணையம் ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
இளம்பெண் சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மர்மமான முறையில் சுவாதி கொலை வழக்கில் மரணமடைந்த ராம்குமாரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புழல் சிறையில் மின்சாரவயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்த விவகாரம் குறித்து விரிவாக விசாரணை நடத்திய பின் தமிழக அரசுக்கு இந்த உத்தரவை மாநில மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்ட வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டு இருந்தார். அதன் பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருந்ததாக ராம்குமாரின் தந்தை புகார் அளித்தார். இந்நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து விசாரணை செய்தது.