நடிகை குஷ்பு “நான் தவறு செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்க முடியாது, தனித்துப் போட்டியிட தைரியம் இல்லாத கட்சி காங்கிரஸ்” என்று விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ் கட்சி நடிகை குஷ்பு சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அவர் தாழ்த்தப்பட்ட மக்களை அவதூறு செய்து விட்டதாக கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து இன்று காங்கிரஸ் கட்சியினர் குஷ்புவின் வீட்டை முற்றுகையிட முயற்சித்தபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். இன்று குஷ்பு செய்தியாளர்களிடம், “நான் தவறு செய்யவில்லை அதனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். தமிழ்நாட்டுக்கு வந்தது முதல் தமிழ் பெண்ணாகவே வாழ்ந்து வருகிறேன், தமிழ் கலாச்சாரங்கள் எனக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட தைரியமில்லாத ஒரே கட்சி காங்கிரஸ் தான்” என்று விமர்சனம் செய்தார்.