மம்மூட்டி படம் பற்றி ஐஸ்வர்யா லெஷ்மி!

Filed under: சினிமா |

மலையாள சினிமாவில் மீண்டும் ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் ‘காதல்’. மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் நவம்பர் 23ம் தேதி ரிலீசானது.

இத்திரைப்படம் தன்பாலின ஈர்ப்பு குறித்து சிறப்பாக பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. மூத்த நடிகரான மம்மூட்டி தன்பாலின ஈர்ப்பாளராக நடித்துள்ளது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக மம்மூட்டியின் கதாபாத்திரம் பலரையும் ஈர்த்துள்ளது. படத்தைப் பார்த்த நடிகை ஐஸ்வர்யா லெஷ்மி படத்தை பற்றி, “மம்மூக்கா நீங்கள் தொடர்ந்து எங்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறீர்கள். உங்கள் கதாபாத்திரத்தின் வலி, தனிமை, பயம் மற்றும் நீங்கள் எடுக்கும் முடிவின் கணம் என அனைத்தையும் நான் உணர்ந்தேன். படத்தின் மிகச்சிறந்த பகுதி இரண்டாம் பாதியில் நீங்கள் “எண்ட தெய்வமே” என பேசுவதுதான். படத்தை தியேட்டரில் பார்த்து ஒரு குழந்தையைப் போல அழுதேன்” என வியந்து பாராட்டியுள்ளார்.