“மரகத நாணயம்” இரண்டாம் பாகம் எப்போது?

Filed under: சினிமா |

ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த் ராஜ், ராம்தாஸ் நடிப்பில்வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’.

தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தம், சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். மொக்கை போடும் பேய்ப் படங்களுக்கு நடுவில், வயிறு வலிக்க சிரிக்க வைத்தது இத்திரைப்படம். அதனால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகி, வசூலையும் குவித்தது. அதையடுத்து ஆதி நடித்த “வீரன்” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. நீண்டகாலமாக “மரகத நாணயம்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.