மருத்துவர் ராமதாஸ் ஜிஎஸ்டி வரி உயர்வை கைவிட கோரிக்கை

Filed under: தமிழகம் |

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் ஜிஎஸ்டி வரி உயர்வு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:-

ஜிஎஸ்டி வரிகள் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிப்பு அடைவர் எனவும் தொழில் துறையினர் வீழ்ச்சி அடையும். எனவே ஜிஎஸ்டி வரியை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும். அடுத்த மாதம் டில்லியில் நடைபெறவுள்ள ஜிஎஎஸ்டி குழு கூட்டத்தில் வரி உயர்வு குறித்து, இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

தற்போது, 5%, 12%,15%,28% ஆகிய அளவுகளில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரி விதிதங்களில் 3 மாற்றங்கள் செய்யப்படவுள்ளது. இதுவரை வரிவிலக்குப் பட்டியலில் உள்ளா பல பொருட்களுக்கும் 3% வரி விதிக்கப்படவுள்ளது.5% வரி பட்டியலில் இருக்கும் பொருட்களுகாக வரி 3% குறைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள பொருட்களுக்கான வரி 8% ஆக உயர்த்தப்படவுள்ளது. மேலும், 12% வரி நீக்கப்பட்டு, பல பொருட்கள் 18% வரிப் பட்டியலில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.