நெல்லையில் 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய தடையாக இருந்த மருமகளை மாமனார் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையை சேர்ந்த தங்கராஜின் மனைவி உயிரிழந்ததால் 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது மகன் தமிழரசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது எழுதிக் கொடுத்த வீட்டை திரும்ப தனது மகனிடம் கேட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து மகன் மற்றும் மருமகள் வீட்டை திரும்ப தர மறுத்ததோடு 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய வேண்டாம் என எச்சரித்ததாகவும் தெரிகிறது. ஆத்திரமடைந்த தங்கராஜ் மகன் மற்றும் மருமகளுடன் சண்டை போட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து மருமகள் முத்துமாரியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தார். தங்கராஜ் தற்போது தலைமறைவாகியிருக்கும் நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.