“மாமன்னன்” டிரெயிலர் ரிலீஸ் எப்போது?

Filed under: சினிமா |

“மாமன்னன்” திரைப்படம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது. படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் “கர்ணன்” படத்துக்குப் பிறகு இயக்கிவுள்ளார். சமீபத்தில் படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது.

படம் பக்ரீத் பண்டிகையன்று ஜூன் 29ம் தேதி ரிலீசாக வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. படத்தின் கதைக்களம் மேற்கு மாவட்ட அரசியலை மையமாக வைத்து உருவாவதாக சொல்லப்படுகிறது. படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.